மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

ஏரலில் பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்

ஏரல்:

ஏரலில் பட்டப்பகலில் பொங்கல் பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.

பொங்கல் பொருட்கள்

ஏரல் அருகே உள்ள திருவழுதிநாடார்விளை ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 42). இவர் ஏரலில் உள்ள பிரபல ஜவுளி கடையில் லோடு வேன் டிரைவராக உள்ளார். அவரது மனைவி புவனேஸ்வரி ( 36). சம்பவத்தன்று பகலில் பொங்கல் பண்டிகைக்காக ஏரல் பஜாரில் பொருட்களை வாங்கி கொண்டு ஏரல் சினிமா தியேட்டரில் இருந்து மங்கலகுறிச்சி செல்லும் சாலையில் வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றார்.

தாலி சங்கிலி பறிப்பு

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மர்ம நபர் திடீரென்று புவனேஸ்வரி கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலிசங்கிலியை பறித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்...திருடன் என கூச்சலிட்டுள்ளார். ஆனால் மர்ம நபர் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அவர் ஏரல் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரலில் பட்டப்பகலில் பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் நகையை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...