மாவட்ட செய்திகள்

அத்திவரதர் தரிசன விழா 839 அரசு பஸ்கள் மூலம் ரூ.6 கோடி வருமானம்

அத்திவரதர் தரிசன விழாவையொட்டி 839 அரசு பஸ்கள் மூலம் ரூ.6 கோடியே 8 லட்சம் வருமானம் கிடைத்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் இந்த மாதம் 17-ந்தேதி வரை அத்திவரதர் தரிசன விழா நடந்தது. தினந்தோறும் லட்சக்கணக் கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்ட நிர்வாகம் காஞ்சீபுரம் மண்டலத்திலுள்ள பஸ் டிரைவர்களும் கண்டக்டர்களும் வார விடுப்பு தவிர்த்து மற்ற நாட்களில் பணி புரிந்தனர்.

பக்தர்களின் வசதிக்காக பல இடங்களில் இருந்து 689 சிறப்பு பஸ்கள், 70 டவுன் பஸ்கள், 80 மினி பஸ்கள் என்று 839 பஸ்கள் இயக்கப்பட்டன.

48 நாட்களில் மினி பஸ் மூலம் வருவாயாக ரூ.2 கோடியே 89 லட்சம், சிறப்பு பஸ் மூலம் ரூ.2 கோடியே 28 லட்சம், டவுன் பஸ்கள் மூலம் ரூ.91 லட்சம் என்று மொத்தம் ரூ.6 கோடியே 8 லட்சம் போக்குவரத்து கழகத்திற்கு வருவாயாக கிடைத்தது.

அத்திவரதர் தரிசன நாட்களில் அதிக வருவாய் ஈட்ட உதவிய விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் ஆர்.முத்துகிருஷ்ணன், அதிகாரிகள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோரை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா பாராட்டினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...