மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து நாகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

நாகப்பட்டினம்,

மாடு, எருது, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கக்கூடாது, வெட்டக்கூடாது என்று அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெளிப்பாளையத்தில் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு நாகை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். நகரசெயலாளர் மணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முருகன், வக்கீல் பிரிவு செயலாளர் ஆல்பர்ட்ராயன், நகர பொருளாளர் ஜோதிபாசு, நகரதுணை அமைப்பாளர் முத்துலிங்கம், நாகூர் இளம்சிறுத்தை பாசறை துணை அமைப்பாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகை சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் சுரேஷ், நகர துணை செயலாளர் பாண்டியன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாட்டு இறைச்சியை உண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை