மாவட்ட செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காரைக்குடி,

நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அலுவலர் ரமேஷ், ஆரம்ப சுகாதார நிலைய சித்தா டாக்டர் பிரீத்தா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கைகளை கழுவும் முறை குறித்து செயல்முறை பயிற்சி அளித்தனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், டிரைவர்கள், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பஸ் நிலையம், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தலங்கள், ஏ.டி.எம். மையம், அரசு பஸ்கள், சுகாதார வளாகங்கள் ஆகியவற்றில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

மேலும் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் மற்றும் துப்புரவு ஆய்வாளர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தலைமையில் பஸ் நிலையம் மற்றும் பயணிகள் நிழற்குடை, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்கள் மற்றும் பஸ்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருபவர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

திருப்புவனம் பேரூராட்சி சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக கூறினார். மேலும் கை கழுவும் முறை குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், டாக்டர்கள் செல்வகுமார், சிந்து, திருப்புவனம் வர்த்தகர்கள், சங்க நிர்வாகிகள், சிவன் கோவில் கண்காணிப்பாளர், மகளிர் குழுவினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் நகரின் அனைத்து வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகமும், வட்டார மருத்துவத்துறை அலுவலர்களும், சுகாதாரத்துறை ஆய்வாளர்களும் செய்திருந்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...