அரக்கோணம்
அரக்கோணம் அருகே வீட்டின் கூரையில் இருந்து தவறி விழுந்தவர் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பெருமுச்சி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (58). இவர் தனது வீட்டின் சிமெண்டு ஷீட்டு கூரை பகுதியினை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் டவுன் போலீசார் சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.