மாவட்ட செய்திகள்

கூடுவாஞ்சேரியில் 4 வழி சாலை பணிக்காக பிடுங்கி நடப்பட்ட பழமை வாய்ந்த மரம் துளிர் விடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு வரை 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் கல்வாய் கிராமம் அருகே சாலை ஓரமாக இருந்த சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த அரச மரம் சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு கல்வாய் கிராம இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அப்படி நீங்கள் மரங்களை அகற்றினால், அந்த மரத்தை வேரோடு அகற்றி அரசு நிலத்தில் நடவேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் அவர்களின் கோரிக்கையை ஏற்று அரச மரத்தில் உள்ள கிளைகள் அனைத்தையும் வெட்டிவிட்டு மரத்தை அப்படியே விட்டு சென்றனர். இது சம்பந்தமாக அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சமூக வலைதளங்களில் இந்த தகவலை வேகமாக பகிர்ந்து வந்தனர். இதை அறிந்த மர வங்கி என்ற தொண்டு நிறுவனம் கல்வாய் கிராமத்திற்கு வந்து 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த அரச மரத்தை 2 கிரேன், ஒரு பொன்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி வேருடன் பிடுங்கி அதே பகுதியில் உள்ள அரசு நிலத்தில் நட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது அந்த அரச மரம் துளிர்விட்டு மீண்டும் வளர தொடங்கி உள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...