மாவட்ட செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பவித்ர உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பவித்ர உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாத இறுதி அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் பவித்ர உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பவித்ர உற்சவம் நேற்று கோவிலில் தொடங்கியது.

மொத்தம் 7 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் முதல் நாளான நேற்று பக்தர்கள் யாரும் இன்றி அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

சிறப்பு திருமஞ்சனம்

உற்சவத்தை முன்னிட்டு பெரியபெருமாள் பூமா தேவி, ஸ்ரீதேவி ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் நூல்கள் பெரிய பெருமாள், பூமா தேவி, ஸ்ரீதேவி ஆகியோருக்கு அணிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை