மாவட்ட செய்திகள்

மேடை கலைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை

மேடை கலைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை

பேரூர்

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டன்புதூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 52), மேடை கலைஞரான இவர் மேடை அமைத்து நாடகங்கள் நடித்து வந்தார்.

இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லை இதனால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மோகன்ராஜ் அக்கம் பக்கத்தினரிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்தார். எனவே அவரை சித்திரைச்சாவடியில் உள்ள நெருங்கிய உறவினர் வீட்டிற்கு உறவினர்கள் அழைத்துச்சென்றனர்.

குலதெய்வம் கோவில் அருகே சென்றபோது சாமி கும்பிட வேண்டும் என்று சொன்னதால் அங்கே அழைத்துச்சென்றனர்.

அப்போது அவர் உறவினர்களிடம் தகராறு செய்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை, அங்குள்ள தோட்டத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்துவிட்டு கோவிலுக்கு சென்றனர்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது உள்ளே இல்லை. அருகே உள்ள கிணற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தொண்டாமுத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் மோகன்ராஜ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...