புதுச்சேரி,
புதுவை லாஸ்பேட்டை பாரதி நகரை சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மகன் பிரேம்குமார் (வயது 20). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
இவரது கல்லூரியில் சின்னக்கடை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரும் படித்து வந்தார். அந்த மாணவியை பிரேம்குமார் காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியுடன் பிரேம்குமார் தகராறில் ஈடுபட்டாராம். மேலும் சமூக வலைதளம் மூலம் மாணவிக்கு மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்து மாணவியின் தாய் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தார்.