மாவட்ட செய்திகள்

காய்கறி மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும்

வத்தலக்குண்டுவில் காய்கறி மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும் என்று பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினத்தந்தி

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதற்கு நிலக்கோட்டை தாசில்தார் சுப்பையா தலைமை தாங்கினார்.

வத்தலக்குண்டு பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ராமேரி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா, ஒருங்கிணைந்த மார்க்கெட் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் சடையாண்டி, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேரூராட்சி அலுவலர்கள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காய்கறி மார்க்கெட் சமூக இடைவெளியை பின்பற்றி, காளியம்மன் கோவில் அருகே வழக்கம்போல் செயல்படும்.

சாலையோர கடைகள் விரிவுபடுத்தப்பட்ட மதுரை சாலையில் வைத்து கொள்ளலாம் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை