பெரியபாளையம்,
திருவள்ளூர் அருகே வெள்ளவேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூடப்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரகாசம்(வயது 45). இவருடைய மகன்கள் சரத்குமார்(23), சரண்ராஜ்(21), சத்தியராஜ்(19). தந்தை-மகன்கள் என 4 பேரும் அதே பகுதியில் இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது.
இதை அந்த பெண்ணின் கணவர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் அந்த பெண்ணின் கணவரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது.
இதில் படுகாயம் அடைந்த அவர், திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசம், அவருடைய மகன்கள் சரத்குமார், சரண்ராஜ், சத்தியராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.