மாவட்ட செய்திகள்

நகைப்பட்டறையில் 38 பவுன் திருட்டு

மதுரை நகைப்பட்டறையில் வேலை பார்த்த வாலிபர் 38 பவுன் நகைகளை திருடி சென்று விட்டார்

தினத்தந்தி

மதுரை

மதுரை நகைப்பட்டறையில் வேலை பார்த்த வாலிபர் 38 பவுன் நகைகளை திருடி சென்று விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

38 பவுன் நகை

மதுரை தெற்குமாசி வீதி, சொக்ககெத்தன் தெருவை சேர்ந்தவர் உத்தம்பக்ரியா(வயது 34). இவர் கான்சாமேட்டுத்தெருவில் நகைப்பட்டறை வைத்திருக்கிறார். இந்த கடையில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த அமித்சூ(28) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

பட்டறையில் பெரிய கடைகளில் கொடுக்கும் நகைகளை செய்து கொடுத்து வந்தனர். அப்போது பட்டறையில் வைத்திருந்த 38 பவுன் நகையை காணவில்லை. அதனை பட்டறை முழுவதும் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

வாலிபர் மாயம்

இந்தநிலையில் கடையில் வேலை பார்த்த அமித்சூ என்பவர் வேலைக்கு வரவில்லை. அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்ற போது அவர் அங்கிருந்து மாயமானது தெரியவந்தது. பின்னர் கடை உரிமையாளர் உத்தம்பக்ரியா இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில் அமித்சூ கடையில் இருந்த நகையுடன் மாயமானது தெரியவந்தது. எனவே உத்தம்பக்ரியா தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நகையுடன் மாயமான அமித்சூவை அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி