மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி 2 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி 2 பேர் படுகாயம்

ஸ்ரீகாளஹஸ்தி,

வேலூர் மாவட்டம், பரதராமியை அடுத்த தாசரபள்ளியை சேர்ந்தவர்கள் ரகுபதியின் மகன் நந்தகுமார் (வயது 23), குமாரின் மகன் புண்ணியகோட்டி (31), சிவய்யாவின் மகன் ராமமூர்த்தி (36). இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக சித்தூர் மாவட்டம், பங்காருபாளையத்துக்கு சென்றனர்.

காட்டப்காரி பள்ளி அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் புண்ணியகோட்டியும், ராமமூர்த்தியும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பங்காருபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பங்காருபாளையம போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.