மாவட்ட செய்திகள்

தொழில் அதிபர் வீட்டில் 7½ பவுன் நகை திருட்டு ; மர்ம நபர்களை போலீஸ் தேடுகிறது

என்.ஜி.ஓ. காலனியில் தொழில் அதிபர் வீட்டில் 7½ பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 38), சென்னையில் தொழில் செய்து வருகிறார். அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே ராமகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சுசீந்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே வீசப்பட்டு கிடந்தன. ஆனால் பீரோவில் பணம் அல்லது நகை ஏதேனும் திருட்டு போனதா? என்று போலீசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து ராமகிருஷ்ணனை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

அப்போது பீரோவில் 7 பவுன் நகை வைத்திருந்ததாக அவர் கூறினார். இதைத் தொடர்ந்து நகை பீரோவில் இருக்கிறதா? என்று போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் பீரோவில் நகை இல்லை. அதை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. பீரோவில் நகைகளுடன் சேர்த்து சுமார் ஒரு கிலோ எடையில் வெள்ளி பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தன. எனினும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் எடுக்கவில்லை. நகைகளை மட்டும் எடுத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

இதே பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தற்போது தொழில் அதிபர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்