மாவட்ட செய்திகள்

அனல் மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நிலைய நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார்.

தினத்தந்தி

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நிலைய நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார்.

2-ம் யூனிட் தலைவர் வெங்கட்டய்யா, செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். மாநில செயலாளர் ரவிக்குமார், நிர்வாகி சலீல்குமார், அருள்நாதன், சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை