திருவள்ளூர்,
இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, கடனுதவி, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 240 மனுக்கள் அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் 27 நபர்களுக்கு காகித பை தயாரிக்கும் பயிற்சி வழங்கி பயிற்சி முடித்த 7 நபர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களையும் வழங்கினார்.
பின்னர் அவர் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.2ஆயிரத்து 460 மதிப்பிலான காதொலி கருவியை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் குமார் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.