மாவட்ட செய்திகள்

திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

ஆனைமலை திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை யொட்டி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

பொள்ளாச்சி,

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி மூலவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து காலை 11 மணிக்கு மூலவருக்கும், பகல் 12 மணிக்கு உற்சவருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் மணக்கோலத்தில் தர்மராஜாவும், திரவுபதியம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேர் வடம் பிடித்தல்

28-ந் தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சியும், மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி 29-ந் தேதி காலையில் நடக்கிறது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்