ஜெயலலிதா பிறந்தநாள் விழா
திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா திருப்பூர் குமரன் சிலை முன் நேற்று காலை நடந்தது. இதையொட்டி குமரன் சிலை முன் ஜெயலலிதாவின் உருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. விழாவுக்கு திருப்பூர் வி.சத்தியபாமா எம்.பி. தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மாநகர் மாவட்ட துணை செயலாளர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெ.பழனிசாமி, கே.பி.பரமசிவம், வடக்கு தொகுதி செயலாளர் ஜே.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பட்டாசு வெடித்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
விழாவில் முன்னாள் நகராட்சி தலைவர் விசை எம்.என்.பழனிசாமி, நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிட்டி பி.பழனிசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பி.கே.முத்து, மாவட்ட விவசாயிகள் பிரிவு செயலாளர் புத்தரச்சல்பாபு, துணை செயலாளர் ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் தண்ணீர்பந்தல் ப.நடராஜ், பூலுவபட்டி பாலு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் பட்டுலிங்கம், ஆனந்தன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
பல்லடம்
பல்லடம் பகுதியில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றி வைத்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். பல்லடம் பகுதியில் அனுப்பட்டி, கணபதிபாளையம், 63 வேலம்பாளையம், அருள்புரம், சின்னக்கரை, ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதூர், தண்ணீர் பந்தல் பகுதிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பரமசிவம் தலைமையில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவினார்கள். பல்லடம் அண்ணா சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பரமசிவம் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் சண்முகம் ஆகியோர் மோதிரமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கட்சியின் பொருளாளர் தருமராஜன் ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் நடராஜன், எம்.கே.ஆறுமுகம், ராமகிருஷ்ணன், சீனிவாசன், கிரி, வில்பவர் மணி, பானு பழனிசாமி, பனப்பாளையம் ராமு, 63வேலம்பாளையம் முருகசாமி, பிரேமா வாட்டர் பழனிசாமி, மகளிரணி ஜோதிமணி, ஜெயந்தி, கவுரி, கலைச்செல்வி உள்பட நிர்வாகிகள், அந்தந்த பகுதி கிளை செயலாளர்கள், அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.
அவினாசி
அவினாசி-பெருமாநல்லூர் நால்ரோட்டில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நந்தகுமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல தலைவர் ஜே.ஆர்.ஜான், பொதுக்குழு உறுப்பினர் பூலுவபட்டி பாலு, பகுதி கழக செயலாளர் பட்டுலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் பி.ஜி.பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். மேலும், அவினாசி புதிய பஸ் நிலையம் அருகே கொடியேற்றி பட்டாசு வெடித்து, ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலிலும், கைகாட்டி புதூரில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் அன்னதானம் வழங்கப்பட்டன.
பொங்கலூர்
பொங்கலூர் ஒன்றியத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட துணைச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் எம்.கே.சுப்பிரமணியம் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி. பரமசிவம், விவசாய பிரிவு செயலாளர் புத்தெரிச்சல் பாபு, இளைஞரணி செயலாளர் யு.எஸ்.பழனிசாமி, வக்கீல் அணி மாவட்ட துணை செயலாளர் சிவசுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மில் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொங்கலூர் சக்திநகர், சந்தைபேட்டை அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டன. பின்னர் சந்தைப்பேட்டை விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொங்கலூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமும், பொங்கலூர் அரிசன காலனியில் கொடியேற்று விழாவும் நடைபெற்றது.
மந்திரிபாளையத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. கொடுவாய் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. பொங்கலூர் வலசுப்பாளையம் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் சிதம்பரம், பேரவை செயலாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதி லட்சுமணன், முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வராஜ், முன்னாள் கவுன் சிலர்கள் ஆனந்தகிருஷ்ணன், சந்திரன், விவசாய அணி பாலுசாமி, மதி, மகளிரணி செயலாளர் ஜோதிமணி, ஒன்றிய இணைசெயலாளர் ஜீவாமணி, கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பெருமாநல்லூர் நால் ரோட்டில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை படத்தில் காணலாம்.