மாவட்ட செய்திகள்

மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் 1¼ மணிநேரம் தாமதம்

மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் 1¼ மணிநேரம் தாமதம்

நீடாமங்கலம்:-

சென்னையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நாள்தோறும் அதிகாலை 4.40 மணிக்கு நீடாமங்கலம் ரெயில் நிலையம் வருவது வழக்கம். ஆனால் நேற்று 1 மணி நேரம் தாமதமாக அதிகாலை 5.55 மணிக்கு நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் தாமதமாக வந்ததால் பயணிகள் சிரமப்பட்டனர். சரக்கு ரயில் கிராசிங் காரணமாக மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்தது என கூறப்படுகிறது.