மாவட்ட செய்திகள்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில் தொடக்க, உயர் நிலை ஆசிரியர்களுக்கு கற்றல் பயிற்சி

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில் தொடக்க, உயர்நிலை ஆசிரியர்களுக்கு கற்றல் பயிற்சி நடந்தது. இதனை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சாந்தா ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் இணைந்து உயர்நிலை மற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் பயிற்சியை திருவையாறு வட்டார வள மையத்தில் நடத்தியது. இதில் தமிழ் பாடத்திற்கான கற்றல் விளைவுகள் பயிற்சி 2 நாட்கள் நடந்தது.

இதனை தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கம் அளித்தார். மேலும் ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றல் அடைவு நிலையை தெரிந்து கொண்டு புதிய யுக்திகளை கையாண்டு திறமைகளை வெளிக்கொணர வேண்டும்.

மாணவர்களின் படைப்புகள், ஒப்படைப்புகள், கலந்துரையாடல், செயல்முறை விளக்கம் போன்ற செயல்பாடுகள் வாயிலாக மாணவர்களின் தனித்திறன் மேம்பட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சுகந்தி, பயிற்றுனர்கள் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜராஜன் செய்திருந்தார்.

பின்னர் முதன்மைக்கல்வி அதிகாரி சாந்தா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் பகல்நேர பராமரிப்பு மையத்தை பார்வையிட்டு சிறப்பு ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்களை மீளாய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்தும், மாணவர்களின் முன்னேற்ற நிலை, மையத்தின் சுற்றுப்புற சுகாதாரம், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை