மாவட்ட செய்திகள்

லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

கிணத்துக்கடவு

மனைவி கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டதால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லாரி டிரைவர்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நெம்பர் 10 முத்து இந்திரா காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). லாரி டிரைவர். இவருடைய மனைவி பத்மாவதி (35). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் பத்மாவதிக்கும் அதேப்பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பார்த்திபனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பச்சிளம் குழந்தை உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவரம் பத்மாவதியின் கணவரான மணிகண்டனுக்கு தெரியவந்தது. இதனால் அவர், மனைவியை கண்டித்தார்.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்

கடந்த வாரம் தான் பெற்ற 2 பெண் குழந்தைகளையும் விட்டுவிட்டு, பத்மாவதி பார்த்திபனுடன் ஓட்டம் பிடித்தார்.

இதனால் மணிகண்டன் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தார். மேலும் அவர், மனைவி வேறொருவருடன் சென்றுவிட்டாளே என்ற விரக்தியில் அக்கம் பக்கத்தில் புலம்பியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை மணிகண்டனின் தனது 2 மகள்களை பொள்ளாச்சி அருகே வஞ்சியாபுரம் ஜே.ஜே.நகரில் உள்ள மாமியார் தனலட்சுமி என்பவரது வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.

தற்கொலை

பின்னர் அங்கு மகள்களை விட்டுவிட்டு இரவு தன்னுடைய வீட்டிற்கு அவர் வந்துவிட்டார். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன், தன்னுடைய மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதை நினைத்து வெறுப்படைந்து வீட்டின் விட்டத்தில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை மணிகண்டனின் வீட்டு கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...