மாவட்ட செய்திகள்

வில்லிவாக்கம், திருவொற்றியூரில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேர் கைது

வில்லிவாக்கம், திருவொற்றியூர் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை வில்லிவாக்கம் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு சிட்கோ நகர் முதல் மெயின் ரோடு பகுதியில், ஒருவர் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, துண்டுச்சீட்டில் எழுதி கொடுத்து ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்தது தெரியவந்தது.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், வில்லிவாக்கம் பாரதி முதல் தெருவை சேர்ந்த ஆன்ட்ரோஸ் (வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆன்ட்ரோஸை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த பணம் மற்றும் துண்டுச்சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, திருவொற்றியூர் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பாபு (39) என்பவரை திருவொற்றியூர் போலீசார் கைது செய்தனர்.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி