மாவட்ட செய்திகள்

ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தி நிறைவு தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன

ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தி நிறைவு பெற்றது. இதில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை, பட்டா மாற்றம், கிராம நத்தம் பட்டா மாற்றம் கேட்டு 1,304 பேர் மனுக்கள் அளித்தனர். இதில் 148 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. 234 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதம் உள்ள மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ஷேக்தாவூத், வருவாய் அலுவலர் ரவி, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் சின்னதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 1,599 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 162 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. ஒரு மனு மட்டும் தகுந்த சான்று இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. மற்ற மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளன.

தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அதிகாரியான திருவள்ளூர் மாவட்ட தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பார்வதி தலைமை தாங்கினார்.

கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ்பாபு, மண்டல துணை தாசில்தார் உமா சங்கரி, வட்ட வழங்கல் அதிகாரி கனகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜமாபந்தியில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 2,518 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 315 மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதி மனுக்கள் நிலுவையில் உள்ளன. இதில் 273 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தநிலையில் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஜமாபந்தி அலுவலர் தங்கவேல் வழங்கினார்.

இதில் மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், தலைமையிடத்து துணை தாசில்தார் ராதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...