மாவட்ட செய்திகள்

வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா

வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது

அரிமளம்

அரிமளம் ஒன்றியம், ஓணாங்குடி கிராமத்தில் அருள்பாலித்து வரும் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஓணாங்குடி பெருமாள் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி, அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பெண்கள் தங்களுடைய குழந்தைகளை தொட்டிலில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதன்பின்னர் கோவில் முன்பாக நடைபெற்ற தீமிதி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனை பயபக்தியுடன் வணங்கினார்கள். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விதமான அபிஷேகங்களும், பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது. திருவிழாவையாட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வீரமாகாளியம்மனை வழிபட்டனர்.