நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய நபர்களுக்கு அபராதம் விதித்தனர். முககவசம் அணியாமல் சுற்றி திரிந்த 1,017 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் தேவையின்றி சுற்றி திரிந்த 113 பேரின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.