கீழ்பென்னாத்தூர்,
தாசில்தார் முருகன் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கீழ்பென்னாத்தூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை அடைந்தது.
இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும், தேர்தலின் போது தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
ஊர்வலத்தில் சமூக பாதுகாப்பு தாசில்தார் சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு தாசில்தார் முருகன் தலைமையில், வருவாய்துறை அலுவலர்கள், ஊழியர்கள் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவுக்கு ஆரணி தாசில்தார் தமிழ்மணி தலைமை தாங்கி, வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர்களின் கடமை ஆகியவை குறித்து விளக்கி கூறி உறுதிமொழி வாசித்தார். இதில் வருவாய் ஆய்வாளர் திருவேங்கடம், மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், தலைமை ஆசிரியை சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
கண்ணமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த வாக்காளர் தினவிழாவில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமையில், ஆசிரியர் தசகுமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றனர்.