மாவட்ட செய்திகள்

ஊரப்பாக்கத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் தங்கச்சங்கலி பறிப்பு

சென்னை திருவல்லிக்கேணி ஆச்சாரி தெருவை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி ரோஸ்லி (வயது 35), இவர் நேற்று முன்தினம் ஊரப்பாக்கத்தில் தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அதே பகுதியில் உள்ள செந்தில் ரெயில்நகர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மர

வண்டலூர்,

சென்னை திருவல்லிக்கேணி ஆச்சாரி தெருவை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி ரோஸ்லி (வயது 35), இவர் நேற்று முன்தினம் ஊரப்பாக்கத்தில் தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அதே பகுதியில் உள்ள செந்தில் ரெயில்நகர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென ரோஸ்லி கழுத்தில் அணிந்து இருந்த 8 பவுன் தங்கச்சங்கலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.