மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க.வின் அனைத்து எம்.பி.க்களின் ஆதரவும் எங்களுக்குத்தான் உள்ளது வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி

அ.தி.மு.க.வின் அனைத்து எம்.பி.க்களின் ஆதரவும் எங்களுக்குத்தான் உள்ளது என்று தஞ்சையில் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

தஞ்சாவூர்,

டி.டி.வி. தினகரன் அணியில் இருந்த வசந்தி முருகேசன் எம்.பி. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தது போல அனைத்து எம்.பி.க்களின் ஆதரவும் எங்களுக்குத்தான் உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அமைச்சர்கள் பதவிக்காக மாறி, மாறி கூறுவதாக டி.டி.வி.தினகரன் கூறுவது தவறான கருத்து. மக்களிடம் தவறான தகவலை அவர் தெரிவிக்கிறார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட உள்ளது. அதில் உண்மை வெளிவரும். பலரும் பல கருத்துகளை தெரிவிப்பார்கள். அதில் எந்த கருத்து உண்மையானது, எது உண்மை இல்லாதது என்பது விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யும் போது தெரிய வரும்.

விசாரணை கமிஷன் அமைத்தால் முதலில் அமைச்சர்கள் தான் சிறைக்கு போவார்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறியதாக கேட்கிறீர்கள். தமிழகத்தில் நடைபெறுவது ஜெயலலிதாவின் ஆட்சி. தற்போது உள்ள அமைச்சர்கள் அவரால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் எத்தகைய சவாலையும் சமாளிப்பார்கள். இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான். நடிகர் கமல்ஹாசன் மட்டும் அல்ல, ஜனநாயகத்தில் யாரும் அரசியலுக்கு வரலாம். முதல்-அமைச்சர் ஆவேன் என எதிர்பார்க்கலாம். ஆனால் முதல்-அமைச்சர் ஆவது, பிரதமர் ஆவது என்பது மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த ஆட்சி பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தும் போது எங்களின் பலத்தை நிரூபிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்