மாவட்ட செய்திகள்

தஞ்சையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்,

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய மாணவமாணவிகள், இளைஞர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் தஞ்சை ரெயிலடியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நல்லதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமார், மாநகர செயலாளர் சுரேஷ், வக்கீல் பிரிவு நிர்வாகி முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட இணைச் செயலாளர்கள் ராம்குமார், கரிகாலன், நிர்வாகிகள் நம்மாழ்வார், கார்த்தி தயாளன், கந்தாசந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என்று ஒலிபெருக்கி கட்டுவதற்கு போலீசார் தடை விதித்தனர். பின்னர் நிர்வாகிகள் பேசியதை தொடர்ந்து ஒலிபெருக்கி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் ஒலிபெருக்கி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டோம். நீங்கள் கைது செய்தாலும் ஒலிபெருக்கி பயன்படுத்தி தான் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து விரைவில் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட வேண்டும் என்று கூறிய போலீசார், ஒலிபெருக்கி பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி அளித்தனர்.