மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கத்தில் வெல்டர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் வெல்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). வெல்டர். இவருக்கு திருமணமாகி அபிராமி (25) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டு கள் ஆன நிலையில், குழந்தை இல்லை என தெரிகிறது. இதனால் மன விரக்தியில் இருந்து வந்த கார்த்திக் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தன் மனைவி மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்த கார்த்திக் வழக்கம்போல் மனைவியிடம் தகராறு செய்து விட்டு தனது அறைக்கு சென்ற நிலையில், மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி அபிராமி கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்துக்கு வந்து, இறந்த கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்