பின்னர் டிக்கெட் எடுத்து விட்டு முதல் நடைமேடையில் இருந்து 2-வது நடைமேடைக்கு தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான சுரேசுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.