செஞ்சி,
செஞ்சி தாலுகா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி செஞ்சியில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் வரவேற்றார். மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு 281 பேருக்கு மொத்தம் ரூ.1 கோடியே 75 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி, செஞ்சி தாசில்தார் பழனி, தனி தாசில்தார் மெகருன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, சுப்பிரமணியன், ஜெயபால், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, செழியன், மாவட்ட விவசாய அணி கணேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி மணிவண்ணன், ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.