மாவட்ட செய்திகள்

மாடியில் துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கி சிறுமி பலி

மாடியில் துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

தாம்பரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி கிருஷ்ணாபுரம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகள் ஸ்டெல்லா(வயது 16). இவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் உள்ள மாடியில் துணிகளை காயப்போட்டார்.
அப்போது வீட்டின் அருகே சென்ற மின்சார வயரில் எதிர்பாராதவிதமாக அவரது கை உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட, சிறுமி ஸ்டெல்லா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மின்சாரம் தாக்கி பலியான சிறுமி ஸ்டெல்லாவின் தந்தை கார்த்திக், எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது புழல் சிறையில் உள்ளார்.
மகள் உயிரிழந்த தகவல் அறிந்த கார்த்திக், புழல் சிறையில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தனது மகள் துக்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

மகளின் இறுதிச்சடங்குக்கு பிறகு மீண்டும் அவர் போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...