மாவட்ட செய்திகள்

லாரி மோதியதில், மின்வாரிய ஊழியர் தலை நசுங்கி பலி

லாரி மோதியதில், மின்வாரிய ஊழியர் தலை நசுங்கி உயிரிழந்தார்.

உடையார்பாளையம்:

வேலைக்கு சென்றார்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கோரைக்குழி கிராமத்தை சேர்ந்த ஜோதிவேலின் மகன் விக்னேஷ்(வயது 24). இவர் கும்பகோணம் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை அவர் தனது கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். நடுவலூர் காட்டுக்கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, விக்னேஷ் மீது மோதியது.

தலை நசுங்கி சாவு

இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார், அங்கு வந்து விக்னேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.