மாவட்ட செய்திகள்

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கூடலூரில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் அவர்கள் மத்திய அரசு எவ்வித நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திராவிட மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, காங்கிரஸ் அப்துல் ரகுமான், ஷாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வாசு, இந்திய கம்யூனிஸ்டு பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சகாதேவன், முஸ்லிம் லீக் அனிபா உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தி.மு.க.வினரின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கூடலூர் பஸ் நிலையப் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்