மாவட்ட செய்திகள்

மதுபிரியர்கள் வீட்டுக்கு சென்று குடிக்க வேண்டும் : மந்திரி சந்திரசேகர் பவன்குலே பேட்டி

மராட்டியத்தில் உள்நாட்டு மதுபான கடைகளை வெளிநாட்டு மதுபான கடைகளாக மாற்றிக்கொள்ள லைசென்சு வழங்கப்படும் என்றும், ஆனால் மதுபிரியர்கள் வீட்டுக்கு சென்று தான் குடிக்க வேண்டும் என்றும் மந்திரி சந்திரசேகர் பவன்குலே தெரிவித்தார்.

மும்பை,

மராட்டிய கலால்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மராட்டியத்தில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுவகைகளை விற்பனை செய்யும் கடைகள் சி.எல்.3 என்றும், வெளிநாட்டு மதுவகைகளை விற்பனை செய்யும் கடைகள் எப்.எல்.2 என்றும் அழைக்கப்படுகிறது.

அதன்படி உள்நாட்டு மது விற்பனை கடைகள் 3 ஆயிரத்து 903 உள்ளன. வெளிநாட்டு மதுவகைகள் விற்பனை செய்யும் கடைகள் 1,685 உள்ளன. உள்நாட்டு மது விற்பனை கடைகளால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அங்கேயே குடித்து விட்டு ரகளை செய்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. குடித்து விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் விபத்து ஏற்படுகிறது.

இதையெல்லாம் தவிர்க்க உள்நாட்டு மதுபானம் விற்கும் கடைகளை, வெளிநாட்டு மது விற்கும் கடைகளாக மாற்றிக்கொள்ள லைசென்சு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு லைசென்சு மாற்றிக்கொள்ளும் கடைகளில் உள்நாட்டு மதுபானங்களையும், வெளிநாட்டு மதுபானங்களையும் விற்கலாம். ஆனால் அங்கு வைத்து குடிக்க அனுமதி கிடையாது. மதுபாட்டில்களை வீட்டுக்கு எடுத்து சென்று விட வேண்டும். இதனால் விபத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தவிர்க்கப்படும்.

இவ்வாறு மந்திரி சந்திரசேகர் பவன்குலே கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...