பூந்தமல்லி,
பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காக்களூர் பால்பண்ணை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். காரில் இருந்த 3 பெண்களிடம் சோதனை செய்ததில் அவர்களிடம் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. சென்னை மாம்பலம் பகுதியை சேர்ந்த அவர்கள், மகளின் திருமணத்துக்காக பட்டுப்புடவை வாங்க அந்த பணத்துடன் காஞ்சீபுரம் செல்வதாக கூறினர். ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து பூந்தமல்லி தேர்தல் நடத்தும் அதிகாரி பிரீத்தி பார்கவியிடம் ஒப்படைத்தனர். அவர் அந்த பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்.