மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை மானபங்கம் செய்த நாயர் ஆஸ்பத்திரி ஊழியருக்கு 3 ஆண்டு ஜெயில்

இளம்பெண்ணை மானபங்கம் செய்த நாயர் ஆஸ்பத்திரி ஊழியருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை,

மும்பையை சேர்ந்த 17 வயது இளம்பெண், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி சிகிச்சைக்காக உறவினருடன் மாநகராட்சி நடத்தும் நாயர் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர் எக்ஸ்ரே எடுத்து வருமாறு கூறினார். இளம்பெண் எக்ஸ்ரே எடுக்கும் பரிசோதனை மையத்திற்கு சென்ற போது அங்கு ஊழியர் விஜய் இருந்தார். அவர் இளம்பெண்ணை மட்டும் பரிசோதனை மையத்திற்குள் வருமாறு கூறினார்.

இதில், பரிசோதனை மையத்திற்குள் சென்ற இளம்பெண்ணை ஊழியர் விஜய் தொட்டு மானபங்கம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் ஊழியரை தள்ளிவிட்டு வெளியே ஓடிவந்தார்.

பின்னர் அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆஸ்பத்திரி ஊழியர் விஜயை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையில், ஆஸ்பத்திரி ஊழியர் விஜய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானது.

இதையடுத்து கோர்ட்டு அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்