நாகூர்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிவுறுத்தல் படியும் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்றுமுன்தினம் இரவு வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பாக்கெட் சாராயம் இருந்தது தெரிய வந்தது.. இதை தொடர்ந்து ஸ்கூட்டரில் வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் வடக்கு தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் ஜீவா (வயது 22) என்பதும், இவர் காரைக்கால் பகுதியில் இருந்து ஸ்கூட்டரில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவாவை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.