செய்திகள்

வட கொரியாவின் ஏவுகணை சோதனை ‘ஒப்புக்கொள்ள முடியாதது’ - சீனா

வட கொரிய ஏவுகணை சோதனை ‘ஒப்புக்கொள்ள முடியாதது’ என சீனா கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை

சீனாவின் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதி லியூ ஜியேயி வட கொரியாவின் ஏவுகணை சோதனைகள் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை வெளிப்படையாக மீறக்கூடியது அதனால் ஒப்புக்கொள்ள முடியாதது என்று கூறினார்.

இவ்விஷயத்தில் தொடர்புடையவர்கள் பொறுமை காக்கும்படி சீனா கேட்டுக்கொள்கிறது. எத்தகைய தூண்டுதல் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கும், பதற்றத்தை தணிக்கவும் பணியாற்ற வேண்டும் என்றும் வேண்டுகிறோம் என்றும் அவர் கூறினார்.

தென் கொரியாவில் அமெரிக்கா ஏவுகணை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

விவாதத்தில் பங்கேற்று பேசிய ரஷ்ய பிரதிநிதி மேற்கொண்டு தடைகளை விதிப்பதும், ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுப்பதும் அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...