செய்திகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் 25 நாடாளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி

ராஜஸ்தான் மாநிலத்தில் 25 நாடாளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 13 தொகுதிகளுக்கு இந்த மாதம் 29-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் நேற்று தொடங்கியது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

அக்கட்சியின் சார்பில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள கிருஷ்ணா பூனியா, ஜெய்ப்பூர் புறநகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போதைய எம்.பி.யும், மத்திய மந்திரியுமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோரை எதிர்த்து களம் இறக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை