சென்னை,
கொரோனா ஊரடங்கால் புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் சார்பில் ஷர்மிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெற்கு ரெயில்வே சார்பில் கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல் இதுவரையில் 501 ஷர்மிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து இயக்கப்பட்ட 259 ரெயில்கள் மூலம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 790 பேரும், கேரளாவில் இருந்து புறப்பட்ட 218 ரெயில்கள் மூலம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 957 பேரும், கர்நாடகாவில் இருந்து சென்ற 21 ரெயில்கள் மூலம் 28 ஆயிரத்து 300 பேரும், புதுச்சேரியில் இருந்து இயக்கப்பட்ட 3 ரெயில்கள் மூலம் 3 ஆயிரத்து 597 பேரும் என இதுவரையில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 644 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர்.
மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.