செய்திகள்

கொரோனா அச்சம்: ‘ஒரு வாரமாக முகத்தை தொடவில்லை’ டிரம்ப் கிண்டல்

கொரோனா அச்சம் காரணமாக ஒரு வாரமாக முகத்தை தொடவில்லை என்று டிரம்ப் கிண்டலாக தெரிவித்தார்.

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனை கூட்டம் வெள்ளைமாளிகையில் நடந்தது. இதில் வைரஸ் பரவலை தடுக்கும் தீவிர நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி டிரம்ப் ஆலோசித்தார்.

இந்த கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப், கொரோனா வைரஸ் அச்சத்தால் நான் எனது முகத்தை கைகளால் தொட்டே ஒருவாரம் ஆகிறது. நான் அதைமிகவும் மிஸ் செய்கிறேன் என்று கிண்டலாக தெரிவித்தார்.