செய்திகள்

அரியலூர்- பெரம்பலூரில் 19 பேருக்கு கொரோனா

அரியலூர்- பெரம்பலூரில் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அரியலூர் கே.கே.நகரை சேர்ந்த ஆண் ஒருவர், வெள்ளாளர் தெருவை சேர்ந்த 49 வயது ஆண், ராஜீவ் நகரை சேர்ந்த 28 வயது ஆண், மேல அக்ரகார தெருவை சேர்ந்த 44 வயது ஆண், மின் நகரை சேர்ந்த 38 வயது ஆண் மற்றும் ஜெயங்கொண்டம் சேவகர் தெருவை சேர்ந்த 48, 28, 52, 10 வயதுடைய 4 ஆண்கள், கடைவீதி தெருவை சேர்ந்த 62 வயது ஆண், காந்தி பூங்கா வெள்ளாளர் தெருவை சேர்ந்த 19 வயது ஆண், இலந்தைக்கூடம் சுவாமி தெருவை சேர்ந்த 59 வயது பெண் என மொத்தம் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 585-ல் இருந்து 597-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 492 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே மொத்தம் 184 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், ஒருவர் உயிரிழந்தார். 168 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 26 வயது பெண், எசனையை சேர்ந்த 72 வயது ஆண், வேப்பந்தட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்த 25 வயது பெண், பாரதிபுரத்தை சேர்ந்த 23 வயது ஆண், வெங்கனூரை சேர்ந்த 20 வயது பெண், பெரம்பலூர் கோல்டன் சிட்டியை சேர்ந்த 40 வயது ஆண், அத்தியூரை சேர்ந்த 76 வயது ஆண் என 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 184-ல் இருந்து 191-ஆக உயர்ந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது