செய்திகள்

தமிழகத்தில் இன்று 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,900 ஆக அதிகரித்துள்ளது. இன்று தொற்று உறுதியானவர்களில் 40 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும், 9 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்திலின்று 375 பேருக்கும், திருவள்ளூரில் 416 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 330 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக விருதுநகரில் 480 பேர், தூத்துக்குடியில் 415 பேர், மதுரையில் 274 பேர், திருநெல்வேலி 246 பேர், கோவையில் 238 பேர், ராணிப்பேட்டையில் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 88 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதில் 63 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 25 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,232 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,210 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,36,793 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 52,939 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 60,375 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 20,75,522 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்