செய்திகள்

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு 72 பேர் பலி

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு இன்று 72 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. மராட்டியத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் உள்ளன. தொடர்ந்து தமிழகம், டெல்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் தலா 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று 3,648 பேர் வைரசின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் 72 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1,403 ஆக உயர்ந்து உள்ளது. 23,065 பேர் குணமடைந்து உள்ளனர். 42,216 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகாவின் பெங்களூருவின் அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் உள்ளன. இன்று ஒரு நாளில் 1,452 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 31 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை கர்நாடக சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை