செய்திகள்

ஒரே நாளில் அதிகபாதிப்பு: பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 6,825 பேருக்கு கொரோனா

பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 6,825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

இந்தியாவைப்போல பாகிஸ்தானிலும் கொரோனா அதிகஅளவில் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்து 546 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 6,825 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இது ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிக பாதிப்பு என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் 24 மணி நேரத்தில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பாகிஸ்தானில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 230 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இதில் 2 ஆயிரத்து 632 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 51 ஆயிரத்து 735 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

பாகிஸ்தானில் அதிகஅளவாக சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் தலா 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல், கைபர்-பக்ரதுங்காவில் 17 ஆயிரத்து 450 பேரும், பலுசிஸ்தானில் 8 ஆயிரத்து 28 பேரும், தலைநகர் இஸ்லாமாபாத்தில் 7 ஆயிரத்து 934 பேருக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 604 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு