புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து நாடுகளின் சுற்றுலா விசாக்களும் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்தது.
மத்திய மந்திரி ஹர்சவர்தன் தலைமையில் நடந்த மந்திரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.