செய்திகள்

ஊரடங்கு தளர்வால் சவூதி அரேபியா- ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு

ஊரடங்கு தளர்வால் சவூதி அரேபியாவிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தினத்தந்தி

துபாய்

கடந்த மாதம் ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொண்ட சவூதி அரேபியாவிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சவூதி அரேபியாவில் வைரஸ் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாத மத்தியில் ஊடரங்கை பிறப்பித்த இந்த இரண்டு நாடுகளும் அவற்றை படிப்படியாக விலக்கி, முழுமையான வர்த்தக நடவடிக்கைகளை துவக்கியதுடன், பீசி, பூங்கா, மால் போன்ற இடங்களிலும் பெருவாரியாக கூட மக்களை அனுமதித்துள்ளன.

இந்த ஆண்டு ஹஜ்ஜை நிறைவேற்றும்போது யாத்ரீகர்கள் பின்பற்ற வேண்டிய கட்டாய வழிகாட்டுதல்கள் மற்றும் சுகாதார நெறிமுறைகளை சவுதி அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்