செய்திகள்

ரஷியாவில் கோர விபத்து: 2 கார்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தன; 6 பேர் உடல் கருகி பலி

ரஷியாவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி பலியாயினர்.

தினத்தந்தி

மாஸ்கோ,

ரஷியாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான மொர்தோவியாவின் தலைநகர் சாரன்சுக்கில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.

திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர் அந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரை உடைத்து கொண்டு எதிர் திசையில் பாய்ந்தது.

அதனைத் தொடர்ந்து எதிர்த் திசையில் வந்த காருடன் இந்த கார் நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் 2 கார்களும் தீப்பிடித்து எரிந்தன.

இந்தக் கோர விபத்தில் 2 கார்களில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்